தொடர் கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம்… சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தற்காலிகத் தடை (வீடியோ)

Author: Babu Lakshmanan
5 July 2022, 10:51 am

கோவை : தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தொடக்கம் காரணமாக, கடந்த சில நாட்களாக கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இன்றும் அதிகாலை முதலே கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, கோவையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலம் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக மூட்பட்டுள்ளது.

https://vimeo.com/726902927
  • Jyothika Supports Suriya விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!