நகை வாங்க சூப்பர் சான்ஸ்…தொடர்ந்து இறங்குமுகத்தில் தங்கம் விலை: இன்னைக்கு ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Author: Rajesh
6 April 2022, 1:26 pm

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,520 க்கு விற்பனையாகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, சவரன் ரூ.38,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,825க்கு விற்பனையானது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம் ரூ.41,712க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து,ரூ.70.80க்கும், ஒரு கிலோ ரூ.70,800-க்கும் விற்பனையாகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!