தொடர்ந்து தேர்தல் விதி மீறல் புகார்கள் : கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம்

Author: kavin kumar
18 February 2022, 7:34 pm

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து தேர்தல் விதிமீறல்கள் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார முடிந்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யும் பணி வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.பல இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பெண் வாக்காளர்களுக்கு கொலுசு மற்றும் ரூ 1000 முதல் ரூ 2000 வரை பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவினர் தொடர்ந்து தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏ.,க்களும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ