தொடரும் பிரதமர் மோடி படமும் பஞ்சாயத்து சண்டையும்… மீண்டும் பிரதமரின் படத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 3:01 pm

கோவை : பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி புகைபடத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் திமுக – பாஜகவினரிடையே மோதல் மூண்டல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை வெள்ளலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் செயல் அலுவலர் அறையில் சுவற்றில் மாட்டப்பட்ட பிரதமர் மோடியின் புகப்படத்தை திமுக வார்டு உறுப்பினர் கனகராஜ் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்து.

திமுக ,பாஜக, தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்தவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திமுக வார்டு உறுப்பினராக உள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1129

    0

    0