ஒப்பந்த பணிகளுக்கான GST தொகையை 18%ஆக உயர்த்தி வழங்குக ; KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!!
Author: Babu Lakshmanan20 July 2023, 7:13 pm
சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக 18.07.2022 முதல் உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஓப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் தொகை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக
உயர்த்தாமல் 12% சதவீத தொகையை மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு
வந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் சார்பாக வழக்கு (வழக்கு எண் WP No 21533 of 2023) தொடரப்பட்டது. அதில், ஓப்பந்ததாரர்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 18.07.2022 முதல் வழங்கப்பட்ட
ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று (20.07.2022) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரணை செய்த மாண்புமிகு நீதிபதி திரு.சி.சரவணன் அவர்கள், 18.07.2022 முதல் ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய 18% சதவீத தொகையை 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்து பணி முடித்ததற்கான தொகையை தரும்படி
உத்திரவிட்டுள்ளார்.