‘மேல கை வைக்கிறான்’ விடுதியில் அலறி ஓடிய மாணவி.. துணைபோன வார்டன்.. NIT-யில் மாணவிகள் விடிய விடிய போராட்டம்..

Author: Vignesh
30 August 2024, 10:11 am

திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது, ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும்போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.

இதுகுறித்து விடுதி வாடனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரை குறைவாக வாடன் பேசியதாக தெரிகிறது. இதனால், வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விடிய விடிய போராட்டம் நடத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NIT கல்லூரி வார்டன் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில், தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!