சர்ச்சையான வள்ளி கும்மி உறுதிமொழி… ஒரு சாதியை குறிப்பிட்டு அரசியல் கட்சி பிரமுகர் எடுத்த சபதம் : பேக் அடித்து திடீர் ட்விஸ்ட்!!
சாதியத்தை ஊக்குவிக்கும் சம்பவங்கள் நடந்தால், விசிக தொடர்ந்து கடுமையாக குரல் எழுப்பி வருகிறது. விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கடந்த நவம்பர் 13ஆம் தேதி தனது X தளப்பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலுவின் வீடியோ இருக்கிறார்.
அந்த வீடியோவில் கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலு சொல்ல சொல்ல பெண்கள் உறுதி மொழி ஏற்கிறார்கள். கல்ணாயம் பண்ணிக்கிறோம்.. கவுண்டர் வீட்டு பையனையே.. இது போதும், இது போதுமே ..எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, சத்தியமே சத்தியமே சின்னமலை சத்தியமே” இவ்வாறு அந்த வீடியோ உள்ளது.
ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்கள், அதே சமூகத்தை சேர்ந்த பையன்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேகேசி பாலு உறுதி மொழி ஏற்க வைத்த வீடியோ, சாதியத்தை ஊக்குவிப்பதாக விசிக குற்றம்சாட்டி உள்ளது.
விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட பதிவில் “சாதியக்கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.(கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலை குணியும் பெண்களை பாருங்கள்)” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கேகேசி பாலு புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதில் அழிவின் விளிம்பில் இருந்த வள்ளி கும்மியாட்டத்தை தற்போது நாங்கள் உயிர் கொடுத்து மேடை வடிவம் கொடுத்துள்ளோம். வாழ்க்கையில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எங்க குழந்தைகளை தற்காத்துக்கொள்ளவும், எப்படி தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடனம் மூலம் புதிய முயற்சி எடுத்துள்ளோம். இது யாரையும் குறிப்பிடுபவன அல்ல, யாரையும் நாங்கள் தவறாக சொல்லவில்லை, யாரையும் குறைத்த மதிப்பிடவும் இல்லை என கூறியுள்ளார்.
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
This website uses cookies.