தேசிய கொடியுடன் பாஜக கொடியை ஏற்றியதால் சர்ச்சை.. வெளியான ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2024, 12:00 pm
பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியுடன் பாஜக கட்சியின் கொடியும் சேர்ந்து ஏற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
தேசியக் கொடியுடன் பாஜக கொடியை ஏற்றியதால் சர்ச்சை!#Trending | #Namakkal | #IndependenceDay2024 | #flag | #BJP | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/YMFBFTeXsT
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 16, 2024
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்கசாலை என்ற பகுதியில் நேற்று சுதந்திர தினத்தன்று பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக்கொடியுடன் கட்சிக் கொடியும் சேர்த்து ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.