பம்பர், ஸ்டிக்கர், நம்பர் பிளேட்டில் சர்ச்சை : காருடன் திண்டுக்கல் லியோனி சிக்கியது எப்படி? பரபரப்பு புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2023, 7:59 pm
பம்பர், ஸ்டிக்கர், நம்பர் பிளேட்டில் சர்ச்சை : காருடன் திண்டுக்கல் லியோனி சிக்கியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோனி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். இலக்கிய சொற்பொழிவாளர் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றத்தின் நடுவராகவும் வலம் வந்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதும் பெற்றவர்.
நகைச்சுவையாக பட்டிமன்றங்களில் டைமிங் ஜோக் அடிப்பதில் பேச்சாற்றல் மிக்கவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி லியோனியின் பேச்சு திறமையில் கவரப்பட்டு அவரை திமுகவிற்கு அழைத்துள்ளார்.
அப்படி இவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 2011 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டு அதனை தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்து வருகிறார். 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இவர் திமுகவை ஆதரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.
இப்படி லியோனி திமுகவில் சேர்ந்து அவர்களை தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிற சில கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமாக வைத்துள்ளார்.
தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசிய காரணத்தினால் லியோனிக்கு தமிழ்நாட்டின் பாடநூல் கழக தலைவர் பதவியும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியைப் பிடித்ததில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பேச்சாளராக சென்று வருகிற லியோனி சென்னை ஆலந்தூர் பகுதியில் இனோவா காரில் பயணித்துக் கொண்டிருந்த திண்டுக்கல் ஐ லியோனியை தடுத்து நிறுத்தி ரூபாய் 2500 அபராதம் விதித்தது காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.
விதிமுறைகளை மீறி நாங்கள் ஆளுங்கட்சி என மிதப்பாக கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர், எக்ஸ்ட்ரா பம்பர், நம்பர் பிளேட் என அனைத்துமே விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்ததால் சென்னை ஆலந்தூர் போலீசார் இவருக்கு 2500 ரூபாய் அபராத தண்டனை விதித்து அபராதத்தை கட்ட சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் லியோனி மீது புகார் கொடுத்தது யார் என்பது வெளியாகியுள்ளது. உமாசங்கர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19ஆம் தேதி இரவு 7.10க்கு கார் சென்றது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
இதையடுத்து சிசிடிவி மேராக்களை கண்காணித்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.