அவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : ஈவிகேஎஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 7:59 pm

அவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : ஈவிகேஎஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், பொய் பேசுவதை தொழிலாக கொண்டுள்ள மோடியை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு செல்லும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: ஆம் ஆத்மியை கட்சியை முடக்க முடிவு? முதன்முறையாக குற்றப்பத்திரிகையில் கெஜ்ரிவால் பெயர்!!

பொய் பேசுவதை தொழிலாக கொண்டுள்ள மோடியை வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு செல்லும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி டெல்லியில் மீண்டும் தலைமையில் ஆட்சி வரவேண்டும் என கூறியவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என தெரிவித்தார்.

மேலும் தாம் அடைய வேண்டிய பதவியை எல்லாம் நான் அடைந்து உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் சீமான், அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்தால் நமது குழந்தைகள் நிலைமை என்னவாகும் எனவும் ஈவிகேஸ் விமர்சனர் செய்தார்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!