சர்ச்சை பேச்சு.. குஷ்பு உருவபொம்மை காலணியால் அடித்து எரிப்பு : ஒன்று கூடிய மகளிர்.. கோஷம் எழுப்பி போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 8:14 pm

சர்ச்சை பேச்சு.. குஷ்பு உருவபொம்மை காலணியால் அடித்து எரிப்பு : ஒன்று கூடிய மகளிர்.. கோஷம் எழுப்பி போராட்டம்!

தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுக்கும் பிச்சை காசு என இழிவாக பேசிய நடிகை குஷ்பு வுக்கு தமிழக முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மண்டல தலைவி கலைச்செல்வி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம் மாநகர துணை செயலாளர் பிரமிளா மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி ஜான்சி ராணி ஜெயஸ்ரீ மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணியினர் கலந்துகொண்டு குஷ்பூ உருவப் படத்தை வாரியலால் அடித்து பின்னர் எரித்து தனது கண்டனங்களை பதிவு செய்த பெண்கள் குஷ்புக்கு எதிரான கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!