லிஃப்ட்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம்..!! வெடவெடத்து போன ரசிகர்கள்..!

Author: kavin kumar
8 February 2022, 2:14 pm

திருச்சி : திருச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் லிஃப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம்,அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். தனது தனித்துவமான நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததை அடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இதனால் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் இவர் இடம்பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், திருச்சியில் நேற்று தென்னுார் சாலையில் புதிய பிரியாணி ஹோட்டலின் திறப்பு விழாவிற்கு குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வந்திருந்தார். மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்த அவர் அதன் பின்னர் தரை தளத்தில் இருந்த நகைக்கடைக்கு செல்ல இருந்தார். லிப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல விழா ஏற்பாட்டாளர்கள் அவரை லிப்டிற்குள் அனுப்பி வைத்தனர். புகழுடன் சிலர் மட்டுமே லிப்டில் சென்றார் போட்டோகிராபர்கள், பாக்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள நகை கடைக்கு விரைந்து சென்றனர்.

தரைதளத்தில் சென்று காத்திருந்த போதும் லிப்ட் கீழே வரவில்லை. 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிப்ட் வராததால் கீழே காத்திருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர் இந்நிலையில் ஒரு வழியாக லிப்ட் கீழே வந்திறங்கிய போது புகழ் வௌியில் வந்தார். ஏன் தாமதம் என்று கேட்ட போது 10 நிமிடத்திற்கும் மேலாக லிப்ட் திடீரென வேலை செய்யதால் முதல் தளத்திலேயே நின்று போனது. பிறகு சரியான பிறகு திரும்ப இயக்கப்பட்டு வந்ததாக புகழ் தொிவித்துள்ளார். கடை திறப்பு விழாவுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம் லிப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1177

    0

    0