விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாலா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பட்டையைக் கிளப்பி வருகிறார். அதில் அவர் செய்யும் கலாட்டாக்கள், ரைமிங் காமெடி அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
இதனால் அவர் தற்போது சின்னத்திரையில் அதிக அளவில் பிரபலமாகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் கூட இவருக்கு சிறந்த காமெடியன் என்ற அவார்டு கொடுக்கப்பட்டது. மேலும் பாலா இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும் அந்த நிகழ்வில் காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்புவது குறித்த வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பாலா பல உதவிகளையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு செய்து வருகிறார்.
படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதே தன்னுடைய லட்சியம் என்றும் பாலா அந்த நிகழ்ச்சியில் கூறினார். அவருடைய இந்த நல்ல மனசை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திததார். அப்போது அவரிடம் தமிழகத்தில் ஆட்சியில் பாஜகவுக்கு…
This website uses cookies.