Over-ஆக சீன் போடும் குக் வித் கோமாளி பிரபலம்.. அடுத்த 40 கதை அஸ்வினாக மாறுகிறாரா.?

Author: Rajesh
6 May 2022, 5:30 pm

சின்னத்திரை சீரியல்களில் மூலம் கதாநாயகனாக நடித்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலருடைய கவனத்தை பெற்ற நடிகர் தான் அஸ்வின். ஹீரோவாக நடித்த ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டின் போது,, ஓவரா கெத்து காட்டி, தற்போது, திக்கும் தெரியாமல் திசையும் தெரியாமல் இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் வழியை பின்பற்றி, விஜய் டிவியின் மூலம் பிரபலமான மற்றொருவர் வரிசையில் நிற்கிறார் என்ற பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அவர் தான், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த புகழ். இதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்களிடம் மென்மையாக பேசுவது போல் நடித்து, தன்னை மேலும் பிரபலபடுத்திக் கொண்டார். இதனால், அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க, வாய்ப்பு கிடைத்தது. பெரிய கதாபாத்திரம் அப்படின்னு எதுவும் இல்ல, மிகச் சிறிய கதாபாத்திரம் தான். காமெடி என்ற பெயரில், இருட்டேட்டிங் தான் செய்திருப்பார். இதுக்கு வலிமை படம் வெளியாவதற்கு முன், அவர் காட்டிய பந்தாவிற்கு அளவேயில்ல.

இப்படி பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சதுனால, சினிமாவில் சீக்கிரம் வளர்ந்து விடுவார் என பலரும் நம்பினார். ஆனால், தற்போது, அப்படியே தலைகீழாக மாறிவருகிறது. அவர், அவர்களுக்கு தனியா ஒரு ரசிகர் கூட்டம், அப்படின்னு வந்துச்சுன்னா போது, நான் தான் பெரிய ஆளுன்னு நினைச்சுக்கிட்டு கொத்து காட்டுவதும் இவரை போன்று வளர்ந்தவர்கள் செய்து வரும் வாடிக்கையான செயல் தான்.

இப்போதெல்லாம், கடை திறப்பு நிகழ்ச்சி, ஏதாவது படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் வேற எந்த நிகழ்ச்சிக்கு வெளிய போனாலே பாடிகார்ட் உடன் போறாராம் புகழ். அப்போ அவர் காட்டும் பந்தா ‘எல்லை இல்லாத வானம்’ போல் நீண்டு கொண்டே போகுது என்று அந்த நிகழ்ச்சி பார்த்தவர்கள் சிலர் கூறுவதையும் கேட்க முடியும். சமீபத்தில்கூட அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் நடித்த படத்திற்கு இருவருமே ஓவராக பந்தா காட்டி வந்தனாராம்.

அதேபோல், ஒரு படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்து விட்டால் போதும், தான் தான் அந்த படத்தின் ஹீரோ ரேன்ஞ்சுக்கு, நடந்து கொள்வாராம் புகழ். இவரது நடிவடிக்கையை பார்த்து பலரும் அஸ்வின் முதலில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அவரது ஓவரான கெத்து காட்டும் நடவடிக்கை பார்த்த ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

தற்போது இதே நிலைமைதான் புகழ்க்கும் வர இருப்பதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே புகழ், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன்3 துவங்கப்பட்ட போது, ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்ற தெனாவட்டு ஆரம்பத்தில் வராத புகழ் நிகழ்ச்சி துவங்கிய ஒருசில வாரத்திலேயே மீண்டும் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!