குளிர்ந்தது கோவை…. காலை முதல் விட்டு விட்டு பெய்யும் மழை : மாணவர்கள், பொதுமக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 9:51 am

கோவை : கோவை மாநகரில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தினமும் மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதனிடையே கோவை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பீளமேடு, ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காலையிலேயே பரவலாக மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!