கடும் வெயிலுக்கு மத்தியில் கோவையை குளிர்வித்த கோடை மழை: வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!!
Author: Rajesh12 April 2022, 1:26 pm
கோவை: குனியமுத்தூர், ஈச்சனாரி, சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் திடீரென 1 நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் இதமடைந்துள்ளனர்.
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை தெற்கு பகுதியில் உள்ள ஆத்துப்பாலம்,குணியமுத்தூர், சுந்தராபுரம்,ஈச்சனாரி உள்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் வழிந்தோடியது. இதே போல கோவை காந்திபுரம்,லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
திடீரென பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மழை பெய்ததால் கோவையின் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.