மீண்டும் கொரோனா? அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் தனி வார்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 1:34 pm

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்துள்ளது. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா படுக்கை வசதிகளை ஏற்படுத்த அறிவித்துள்ளது.

அதன்படி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த மையம் செயல்படும். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உடையவர்கள் இந்த மையத்துக்கு வந்து தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 25-க்கும் மேற்பட்ட கொரோனா படுக்கை வசதிகளும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 863

    0

    0