5 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கிய கொரோனா பாதிப்பு…! திடீரென உச்சம்பெற்ற கொரோனா உயிரிழப்பு

Author: kavin kumar
8 February 2022, 8:07 pm

சென்னை : தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 137 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 331 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 37 பேர் உயிரிழந்துள்ளார். 19 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது. இன்று 20,237 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 92ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 792 பேருக்கும், கோவையில் 778 பேருக்கும், செங்கல்பட்டில் 398 பேருக்கும், திருப்பூரில் 276 பேருக்கும், சேலத்தில் 251 பேருக்கும், ஈரோட்டில் 246 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…