இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா : அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. சுஹாசினி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 11:20 am

தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குநர்களில் மணிரத்னத்திற்கு பெரும் பங்குண்டு. சின்ன சின்ன வசனங்கள், இருட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இவரது பேவரைட்.

தற்போது இவர் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில் மணிரத்னம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்னூட்டங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மணிரத்தினம். அவர் நலமாக இருக்கிறார் என சுஹாசினி தகவல் தெரிவித்துள்ளார்.

  • Is this actor the reason why Bhagyaraj's daughter attempted suicide பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!