பி.பி.இ கிட் இல்லாமல் வாக்களித்த கொரோனா நோயாளிகள் : அதிகாரிகள் அலட்சியத்தால் தொற்று பரவும் அபாயம் …

Author: kavin kumar
19 February 2022, 9:19 pm

கோவை: கோவையில் வாக்களிக்க வந்த கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. கோவையில் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இறுதியாக 5 மணி நிலவரம் வெளியிடப்பட்டது அதில் கோவை மாவட்டத்தில் மொத்தமாக 56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும் என்றும்,

5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கோவையில் வாக்களிக்க வரும் கொரோனா நோயாளிகளுக்கு பி.பி.இ கிட் கூட வழங்காமல் வாக்களிக்க வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரையும் சாதரணமாக கையாண்டுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். கொரோனா நோயாளிகளுக்கு பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு உடைகள் வழங்கி, தொற்று பரவல் தடுப்பை உறுதிப்படுத்தாமல் அதிகாரிகள் செய்த இந்த செயல் அங்கிருந்த மற்ற மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1290

    0

    0