மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை : மாஸ்க் கட்டாயம்.. வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 9:32 pm

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதில் முக்கியமாக மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொது இடங்கள் , கடற்கரை , பூங்காக்கள் ,மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவம் அணிய வேண்டும். புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை. அணைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1948

    1

    0