அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் காற்றில் பறந்த கொரோனா விதி : ஆட்சியர் உத்தரவிட்டும் NO மாஸ்க், NO SOCIAL DISTANCE!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 10:08 pm

பால்வளதுறை அமைச்சர் பங்கேற்ற திராவிட மாடல் பயிற்சி கூட்டத்தில் முககவசம் அணியமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் நடந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் கழக சொற்பொழிவாளர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காற்றில் பறந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

முக கவசம் அறியாதவர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தும் ஒருவரும் முககவசம் அணியாமல் சமூக இடை வெளியை பின்பற்றாமல் 500ககும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் கட்சியினர் அனைவருக்கும் உணவு வழங்கிய போதும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்றி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 636

    0

    0