கைதியால் போலீசாருக்கு பரவிய கொரோனா : அடுத்தடுத்து காவலர்களுக்கு பரவிய தொற்று… பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 4:24 pm

நெல்லை மாநகர காவல் சரக்கத்திற்குட்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சாந்தி என்பவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் அஜர் செய்ய அழைத்து சென்ற தச்சநல்லூர் காவல் துறையினருக்கும் கொரனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் இன்று மாலை தச்சநல்லூர் காவல் நிலையம் முழுவதும் மாநகராட்சி நிர்வாகத்தினரால் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று பரவியுள்ள சம்பவம் மாநகர காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…