மீண்டும் மிரட்டும் கொரோனா… தமிழகத்தில் கணிசமாக உயர்ந்த பாதிப்பு : அஜாக்கிரதை வேண்டாம்.. இன்றைய முழு நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 9:41 pm

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 1,372 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 1059 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 393 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும், திருவள்ளூரில் 142 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிகிச்சையில் 13,319 பேர் உள்ளனர்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 794

    0

    0