கடை கடையாக நடந்த அதிரடி ஆய்வு : பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 12:53 pm

கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா மற்றும் அதிகாரிகள் களமிறங்கினர்.

கோவை மாநகராட்சி சார்பில் இன்று நெகிழி பயன்பாடு உள்ள பகுதியக கருதப்படும் ரயில்நிலையம் அருகே உள்ள கடைகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலமையில் அதிகாரிகள் கடை கடையாக ஆய்வு செய்தனர்.

கிலோ கணக்கில் நெகிழில்கள் பறிமுதல் செய்து, மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்திட வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆய்வில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வம், மாமன்ற உறுபினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 456

    0

    0