ஊதிய உயர்வு வழங்காத நகராட்சி நிர்வாகம்: கண்டித்து 120 ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சாலை மறியல்…!!

Author: Sudha
12 August 2024, 11:33 am

தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஊதியம் ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை என கருத்து நிலவிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி மாவட்ட ஆட்சிய் இதனை விசாரித்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 410 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த ஊதியம் இன்றுவரை நகராட்சி நிர்வாகம் வழங்காமல் உள்ளது.

அதே போல நகராட்சியில் ஓட்டுனர்களாக பணிபுரியும் 6 நபர்களுங்கு நாள் ஒன்றுக்கு ரூ560 வழங்க உத்தரவு பிறபித்தும் அதனையும் வழங்காததை கண்டித்தும் இன்று வரை ஊழியர்களுக்கு ESI மற்றும் PF குறித்து கணக்கு காட்டவி்ல்லை எனகூறி இன்று துப்புறவு தூய்மை பணியாளர்கள் ப.ஆர்.சுந்தரம் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

உடனடியாக அங்கு வந்து நகராட்சி ஆணையர் அண்ணாமலை(எ) புவனேஸ்வரன் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!