அனைத்து துறைகளிலும் ஊழல்.. மக்களை வஞ்சிக்கும் திமுக : கடுகடுக்க வைத்த தேமுதிக..!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 2:29 pm

விழுப்புரம் பழையப் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதற்கு மக்கள் முன்வர வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு உறுதுணையாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இருந்தன.

ஆனால், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தர மறுக்கிறார். இதையடுத்து, எங்களுக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை ஏன் தரம் மறுக்கிறீர்கள் என்று சிவக்குமார் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டிய இடத்தில் திமுகவினர் இருக்கின்றனர். ஆனால், கேட்க மறுக்கின்றனர்.

கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை தந்து விட்டு, ஆட்சிக்கு வந்து விட்டு மக்களுக்கு திமுக எதையும் செய்யாமல் வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சந்தி சிரிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் மின் கணக்கீட்டு செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், அதனை செய்யாமல் எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்யும் ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 300 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி