தார்சாலையில் ஊழல் : திமுக மீது புகார் அளித்த அதிமுகவினர் மீது ஒப்பந்ததாரரின் லாரியை எரித்ததாக பொய் வழக்கு..கரூரில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 10:51 pm

கரூர் : தார்சாலை போடப்பட்டதாக நடைபெற்ற ஊழல்களை வெளி கொண்டு வந்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அளவில் ரோடு போடாமலே பணம் எடுத்ததாக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் சுமார் 5 தினங்களாக புகார் கொடுத்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தார்சாலைகள் புதிதாக போடப்பட்டன.

இந்நிலையில், புகார் அளித்த நிலையிலேயே தார்சாலைகள் போடப்பட்டுள்ளன என்றும் திமுக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மனு கொடுத்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சாலைகள் போடும் பணியில் லாரி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக நின்ற தானேஷ் என்கின்ற முத்துக்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளருமான கமலக்கண்ணன், கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் திருவிக உள்ளிட்டோர் மீதும் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் என்று அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் தாந்தோணிமலை அருகே நேற்று முன்தினம், திமுக ஒப்பந்ததாரரின் டிப்பர் லாரி எரிந்து நாசமானது. இந்த விவகாரத்தில், லாரிக்கு மர்மநபர்கள் தீவைத்த நிலையில், ஓட்டுநர் உள்பட 2 பேர் தாக்கப்பட்டனர்.

தீ வைத்த நபர்கள் தப்பிய நிலையில், தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், தனது நிறுவனத்தின் லாரி எம்-சாண்ட் ஏற்றி சென்றபோது, லாரியை மடக்கி தாக்கியதாகவும், அப்போது, நிறைய பேர் காரில் வந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

தானேஷ் எனும் முத்துகுமார் மற்றும் திரு.வி.க. இருவரும் லாரியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் கூறியுள்ளார். இதன்பேரில், அதிமுக கரூர் அதிமுக நிர்வாகிகள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ