கேப்டன் உயிருடன் இருக்கும் போது பத்மபூஷன் கொடுத்திருக்கலாம் : பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2024, 3:49 pm
கேப்டன் உயிருடன் இருக்கும் போது பத்மபூஷன் கொடுத்திருக்கலாம் : பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!!
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, விஜயகாந்த் உயிருடன் இருந்த காலத்திலேயே விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். விஜயகாந்த் இருந்தபோதே கொடுத்திருந்தால் சந்தோஷமாக பெற்றிருப்போம்.
விஜயகாந்த் மறைந்து 30 நாட்களுக்கு பிறகு இந்த சிறப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறோம்.
பவதாரிணி மறைந்தது மிகப்பெரிய இழப்பு. பவதாரிணியை சின்ன குழந்தையாக இருந்த போதிருந்து பார்த்திருக்கிறேன். பவதாரிணியின் இனிய குரலை இனி கேட்க முடியாது என்பதே வேதனைதான் என அவர் கூறினார்.