உன் புருஷன் கஞ்சா வியாபாரி… உன் புருஷன் சாராய வியாபாரி… ஊராட்சி மன்ற கூட்டத்தில் திமுக தலைவியுடன் கவுன்சிலர் மோதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 9:15 am

தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர் கனிமொழி தனது வார்டுக்கு தலைவி நிதி ஒதுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது தலைவிக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உரிய பதில் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கனிமொழி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தினர். கவுன்சிலர் கனிமொழி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்ச்செல்வி தனக்கு பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய தமிழ்ச்செல்வி, எல்லா உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கி கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவர் எனது மருமகனை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார், ஆனால் கனிமொழியின் கணவர் சாராய வியாபாரி என குற்றம்சாட்டினார்.

இதே போல செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தலைவி தமிழ்ச்செல்வி கணவர் சட்டவிரோதமாக போதை பொருட்களை விற்று வருகிறார், ஏற்கனவே அவர் மீது வழக்கு உள்ளது. ஆனால் தமிழ்ச்செல்வி இதற்கெல்லாம் துணை போகிறார், அவர்களுக்கு உடந்தையாக எம்எல்ஏ ராஜா செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்