செந்தில் பாலாஜி குணமடைய வேண்டி மொட்டை போட்ட கவுன்சிலர் : மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 9:51 pm

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.

மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்க பிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!