பாமகவுக்கு ஒரு ரூல்ஸ்.. திமுகவுக்கு ஒரு ரூல்ஸ்? மாணவர்கள் மீது திமுக துண்டை போட்டு ஆடிய கவுன்சிலர்!(வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan24 March 2025, 2:11 pm
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் அரசு நடுநிலைப்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது பொது மக்கள் குழந்தைகளின் பெற்Nறூர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
அப்பொழுது குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்கும் போது 9 வது வார்டு திமுக உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளோடு நடனமாடி கொண்டிருந்தார். அப்போது தான் அணிந்திருந்த திமுக துண்டை மாணவர்கள் மீது போட்டு உற்சாக நடனம் ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவில் பாமக துண்டை பள்ளி மாணசல்கள் அணிந்து நடனமாடிய சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி கல்வி துறை அமைச்சர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்திருந்தார்.
குத்தாட்டம் போட்ட திமுக கவுன்சிலர் : சர்ச்சையான வீடியோ!#Trending | #TNGovt | #DMKFailsTN | #updatenews | #school pic.twitter.com/u7GMvbKq7p
— UpdateNews360Tamil (@updatenewstamil) March 24, 2025
ஆனால் திமுக வார்டு உறுப்பினர் குழந்தைகள் மீது திமுக கட்சி துண்டை அணிவித்து நடனமாடிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கபடுமா? ஏன்ற கேள்வியும் எழுந்துள்ளது..