ஆர்டர் பண்ணா போதும்.. பால் பாக்கெட் போல் கள்ளச்சாராயம் இப்போ டோர் டெலிவரி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

Author: Vignesh
20 June 2024, 11:58 am

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ள சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு சாராயம் குடித்த ஆறு பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் மரணம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து, மேலும் சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

இதில், இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்களும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கள்ள சாராயம் தொடர்பான வழக்கு தற்போது, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷச்சாராயம் சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலம் ராமசேசபுரம் பகுதியில் பால்பாக்கெட் போல பைக்கில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயத்தை சிலர் டோர் டெலிவரி செய்துள்ளனர். இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் நம்மிடையே, “வீடியோ குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 453

    0

    0