நாங்குநேரி நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்… தடவியல் நிபுணர் குழு விசாரணை… நெல்லையில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
21 November 2023, 2:38 pm

நெல்லை மாவட்டம் நான்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிருபராக உள்ளார். இன்று காலையில் வழக்கம் போல் வானமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார்கள்.

அப்போது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர். அந்த வெடிகுண்டு வெடிக்க வில்லை. தொடர்ந்து, இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டிஎஸ்பி அசோக் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மேலும் தீவிர விசாரணை நடைபெற உள்ளது. அதோடு, தொடர்பாக தடவியல் நிபுணர் குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?