பைக்கில் இருக்கி கட்டிபிடித்து வந்த தம்பதி.. சந்தேகம் அடைந்த போலீசார் : விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 7:32 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்திற்கு கஞ்சா கடத்தி கொண்டு செல்வதாக ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் ஒசூர் அருகே உள்ள பைரமங்கலம் பிரிவு சாலையில் திடீர் வாகன சேதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குபின் முரனாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

பிடிபட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் (31) மற்றும் அவரது மனைவி ராணி (32) என்பதும் இருவரும் கெலமங்கலம் அருகே ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply