கோவை கவுண்டம்பாளையம், கந்தகோணார் நகரை சேர்ந்தவர் ராஜன் ( 45). தொழில் செய்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிஜாய் ( 46) மற்றும் அவரின் மனைவி ரெகனா ஆகியோர் அறிமுகமானர்கள். இவர் இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக உள்ளதாக ராஜனிடம் தெரிவித்தார்.
தனக்கு சொந்தமாக பாலக்காடு அகழியில் இடம் இருப்பதாகவும் அதை விற்பனை செய்ய பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து ராஜனை அகழிக்கு அழைத்துச் சென்று ஒரு இடத்தை காட்டி உள்ளனர்.
ராஜனுக்கு இடம் பிடித்து இருந்ததால் வாங்க விருப்பம் தெரிவித்தார். இதை அடுத்து, நவக்கரையில் உள்ள ராஜனின் இடத்துக்கு வந்த பிஜாய் மற்றும் அவரின் மனைவி அகழியில் உள்ள இடத்தை கிரையம் செய்து தர ரூ. 1 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரம் பணம் கேட்டனர்.
இதையும் படியுங்க: சவுக்கு சங்கர் வழக்கில் டுவிஸ்ட்.. நடந்த அதிரடி மாற்றம் : நீதிபதி உத்தரவு!!
மேலும், பத்திர பதிவு வேலைகளை முன் கூட்டியே தயார் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி ரூ. 5 லட்சம் பணத்தை பெற்றனர். அதன் பின்னர், ராஜன் 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை, 15 தவணைகளில் ரூ. 1 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை அனுப்பினார்.
பணத்தை பெற்று பல நாட்கள் கடந்தும், பிஜாய் இடத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. ராஜன் நேரிலும், போனிலும் பலமுறை கேட்டும் பிஜாய் முறையாக பதிலளிக்கவில்லை. மாறாக பல்வேறு காரணங்கள் கூறி காலம் கடத்தி வந்தனர்.
இதை அடுத்து ராஜன், பிஜாயின் வீட்டுக்கு சென்ற பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு பிஜாய் தான் ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும், அரசியல் பிரமுகர்களை எல்லாம் தெரியும் எனவும் கூறி பணத்தை திருப்பி தர முடியாது என மிரட்டினார்.
மேலும், பணத்தை கேட்டு வந்தால் ஆள் வைத்து கொன்று விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், ராஜன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த, 17 ம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பிஜாய் மற்றும் அவரது மனைவி ரெகனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்த பிஜாயை மாவட்ட குற்ற பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ரெகனாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.