கோலமாவு கோகிலா பாணியில் நடந்த சம்பவம் : போதை மாத்திரை விற்பனை… கணவன் – மனைவி கைது..!!

Author: Babu Lakshmanan
2 February 2023, 7:04 pm

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த அசாம் மாநிலதை சேர்த்த நசிமாபேகம் (22), அழருல் இஸ்லாம் (24) ஆகிய தம்பதி இடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசி, போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 386

    0

    0