தனிமையால் வாழ்க்கையில் விரக்தி ; தூக்கில் தொங்கிய கணவன் – மனைவி ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 1:51 pm

கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35). பழைய கார்களை வாங்கி, விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அய்யாசாமியின் வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் கணவன் – மனைவி இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் நடத்திய விசாரணையில், கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும், காதல் திருமணம் செய்து குழந்தைகள் இல்லாத நிலையில் உறவினர்கள் யாரும் இவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்த விபரீத முடிவை இருவரும் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுவதாக தெரிய வந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 479

    0

    0