கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2025, 4:27 pm
கடலூரில் கடந்த 2014ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியும் இவரும் நண்பர்கள்.
7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதால் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு இட்லி கடைக்கு பலகாரம் வாங்க சென்ற சிறுமி, அந்த கடை உரிமையாளரின் மனைவி தனலட்சுமியும், அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார்.
இதையும் படியுங்க: ஸ்டேட்டஸ் அரிப்புக்காக ரூ.100 கோடியில் வீடு.. நயன்தாராவின் பணத் திமிர் : பிரபலம் கொந்தளிப்பு!
இதைப் பார்த்த தனலட்சுமி, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என கூறிவிட்டு, சிறுமியை தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை அறிந்த அந்த சிறுமியின் தோழியையும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார் தனலட்சுமி. 2 சிறுமிகளையும் புரோக்கர் கலா என்பவரிடம் விபச்சாரத்திற்காக தள்ளியுள்ளார்.
கள்ளக்காதலனை தொடர்ந்து செல்வராஜ் என்பவருடன் சிறுமிகளை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்த தனலட்சுமி, மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டிற்கும் 2 நாட்கள் அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து விபச்சாரத்தல் சிறுமிகளை ஈடுபடுத்திய தனலட்சுமி இறுதியாக சதீஷ்குமார், தமிழரசி தம்பதியிடம் சிறுமிகளை விற்பனை செய்துள்ளார். அந்த தம்பதி சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மாணவிகள் இருவரும் திட்டம் போட்டு அங்கிருந்து தப்பி, திட்டக்குடி காவல்நிலையத்தில் நடந்ததை கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 16 பேர் மீது குற்றம் நிரூபனமானதால் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த தமிழரசி, சதீஷ்குமார் தம்பதியை 7 வருடங்களுக்கு பிறகு கைது செய்து விசாரணை நடைபெறுகிறது.
