கொடைக்கானலில் தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கிய ஜோடிகள் : சுற்றுலா வந்த போது சோகம்.. விசாரணையில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 1:36 pm

ம‌துரை த‌ல்லாகுள‌ம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், சித்ராபுஷ்ப‌ம் த‌ம்ப‌திய‌ர். இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை என்பது கூறப்படுகிறது .

இவர்கள் இருவருடன் சித்ரா புஷ்பத்தின் தாயார் மாசிலாராஜ‌பாண்டி ஆகிய‌ மூவ‌ரும் திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லுக்கு க‌ட‌ந்த‌ புத‌ன் கிழ‌மை சுற்றுலா வ‌ந்துள்ள‌ன‌ர்.

க‌ட‌ந்த‌ மூன்று தின‌ங்க‌ளாக‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு ர‌சித்து விட்டு நேற்று இர‌வு பேருந்து நிலையம் அருகே இருந்த த‌ங்கும் அறைக்கு திரும்பிய‌வ‌ர்க‌ள் வெகு நேர‌ம் முழித்திருந்து பேசிக்கொண்டிருந்த‌தாக‌ கூற‌ப்ப‌டுகின்ற‌து.

இதில் வ‌ய‌தான‌ மாசிலா மூதாட்டி தூங்கிவிட்ட‌தை தொட‌ர்ந்து க‌ண‌வ‌ன் ம‌னைவி இருவ‌ரும் க‌ழிவ‌றைக்குள் சென்று தூக்கிட்டு த‌ற்கொலை செய்து கொண்ட‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து.

இத‌னை தொட‌ர்ந்து அதிகாலையில் க‌ண்விழித்த‌ மூதாட்டி இருவ‌ரும் இல்லாத‌தை க‌ண்டு இவ‌ர்க‌ள் இருவ‌ரின் பெய‌ர்க‌ளை சொல்லியும் அழைத்துள்ளார்.

அத‌னை தொட‌ர்ந்து த‌ங்கும் அறையில் உள்ள‌ க‌ழிவ‌றைக்கு சென்று க‌த‌வை திற‌ந்த‌ போது இருவ‌ரும் தூக்கிட்டு த‌ற்கொலை செய்து கொண்ட‌து தெரிய‌வ‌ந்த‌து.

ப‌த‌ட்ட‌மான‌ மூதாட்டி த‌ங்கும் விடுதி மேலாள‌ரிட‌மும் அடுத்த‌டுத்த‌ அறைக‌ளில் த‌ங்கியிருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் இது குறித்து தெரிவிக்க‌வே அவ‌ர்க‌ள் கொடைக்கான‌ல் காவ‌ல்நிலைய‌த்திற்கு த‌க‌வ‌ல் அளித்துள்ளன‌ர்.

த‌க‌வ‌ல் அடிப்ப‌டையில் ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு விரைந்து வ‌ந்த காவ‌ல்துறையின‌ர் க‌ழிவ‌றையில் தூக்கிட்டு த‌ற்கொலை செய்து கொண்ட‌வ‌ர்க‌ளின் ச‌ட‌ல‌த்தை மீட்டு கொடைக்கான‌ல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிரேத‌ ப‌ரிசோத‌னைக்கு அனும‌தித்துள்ளன‌ர்.

மேலும் க‌ட‌ன் பிர‌ச்சனையில் தூக்கிட்டு த‌ற்கொலை செய்தார்க‌ளா, திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத மனக்கவலையா அல்ல‌து வேறு ஏதேனும் கார‌ண‌மா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோண‌ங்க‌ளில் கொடைக்கானல் காவல் துறையினர் விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 573

    0

    0