மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், சித்ராபுஷ்பம் தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை என்பது கூறப்படுகிறது .
இவர்கள் இருவருடன் சித்ரா புஷ்பத்தின் தாயார் மாசிலாராஜபாண்டி ஆகிய மூவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த புதன் கிழமை சுற்றுலா வந்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே இருந்த தங்கும் அறைக்கு திரும்பியவர்கள் வெகு நேரம் முழித்திருந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதில் வயதான மாசிலா மூதாட்டி தூங்கிவிட்டதை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அதிகாலையில் கண்விழித்த மூதாட்டி இருவரும் இல்லாததை கண்டு இவர்கள் இருவரின் பெயர்களை சொல்லியும் அழைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து தங்கும் அறையில் உள்ள கழிவறைக்கு சென்று கதவை திறந்த போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பதட்டமான மூதாட்டி தங்கும் விடுதி மேலாளரிடமும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் இது குறித்து தெரிவிக்கவே அவர்கள் கொடைக்கானல் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.
மேலும் கடன் பிரச்சனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்களா, திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத மனக்கவலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
This website uses cookies.