அனுமதியின்றி செயல்பட்ட பள்ளிவாசலை மூட கோர்ட் உத்தரவு : சீல் வைக்க வந்த போலீசாருக்கு எதிர்ப்பு… பேரணியாக வந்த இஸ்லாமியர்கள்.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 2:14 pm

திருப்பூர் : வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளி வாசல் மூட எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் பேரணியாக வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் அதை மூட வேண்டியும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து பள்ளிவாசல் மூட கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் இன்று காலை போலீசார் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமிய பெருமக்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை.

பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்க முயன்றார்கள். இதற்குள்ளாக இந்த தகவல் பரவி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு கண்டன கோசம் எழுப்பினார்கள். சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டார்கள்.

சிறிது நேரம் மரியலுக்கு பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக வந்தார்கள். மாநகராட்சி சிக்னலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பள்ளிவாசல் மூடப்படுவதை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1228

    0

    0