பரபரப்பை கிளப்பும் பஞ்சமி நில விவகாரம்… முரசொலி மீதான மேல்முறையீடு வழக்கில் புதிய ஆணை போட்ட நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 8:12 pm

பரபரப்பை கிளப்பும் பஞ்சமி நில விவகாரம்… முரசொலி மீதான மேல்முறையீடு வழக்கில் புதிய ஆணை போட்ட நீதிமன்றம்!!

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம் பதிலளிக்கவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி அறக்கட்டளை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. 1825 சதுர அடி கொண்ட இந்த நிலம் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் முன்னர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 291

    0

    0