நீதிமன்றம் சொன்ன 6 மாதம்.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்..!!
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா். சவுக்கு சங்கர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆசிரியராக இருக்கும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதனால் பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. ரசிகர்கள் சோகம்!
அவர் ஆறு மாதங்களுக்கு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த வழக்கிலும் ஜாமின் கிடைக்கும் வரை சிறையில் இருந்து வெளியேற வரமுடியாது.
இது கிரிக்கெட் இல்லை,பேட்டிங்! 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் அகமதாபாத்…
வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…
தடைக்கு காரணம் என்ன? விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீர தீர சூரன் 2 திரைப்படம்,இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள…
பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் நோக்கில் அதிமுக இருப்பதாக கூறப்படும் நிலையில், தவெக அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்…
கொடைக்கானல் விடுதியில் நண்பர்கள் சேர்ந்து சக தோழரைக் கொன்று கேம்ப் ஃபயரில் போட்டு எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…
விழுப்புரம் தவெகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. விழுப்புரம்: விழுப்புரம்…
This website uses cookies.