9 வகை உணவுகள்… வளையல், பட்டாடை அணிவித்து பசு மாட்டுக்கு வளைகாப்பு… நெகிழ்ச்சியடைய வைத்த கோவை சிவனடியார்கள்!!

Author: Babu Lakshmanan
10 December 2022, 12:12 pm

கோவை ; கோவையைச் சேர்ந்த சிவனடியார்கள் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியடைய வைத்த கோவையை சேர்ந்த சிவனடியார்கள்.

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் பசுவை புனிதமாக கருதுகிறது. சிறப்புக்குரிய கோமாதா எனப்படும் பசு மாட்டின் சிறப்பை, மேலும் அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில் பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து, அப்பசுவிற்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்டது.

மேலும், பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட 9 வகை உணவுகள் பசு மாட்டிற்கு ஊட்டப்பட்டது. பின் அனைவரும் பசுவினை பயபக்தியுடன் தொட்டு வழிபட்டனர். முன்னதாக, தேவார-திருவாசக, கைலாய வாத்ய இசையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாரத்துடன் வளையல், தாலிச்சரடு உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 618

    0

    0