பெரியார் சிலை மீது மாட்டுச் சாணம் வீசி அவமதிப்பு.. காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி : ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2023, 1:58 pm
பெரியார் சிலை மீது மாட்டுச் சாணம் வீசிய மர்மநபர்கள்… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி : ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!
பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் தந்தை பெரியாரின் உருவ சிலை உள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் பெரியாரின் சிலை மீது சாணியை பூசி சென்றுள்ளனர்.இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல் நிலைய போலீசார் அவசர அவசரமாக தண்ணீரை ஊற்றி பெரியாரின் சிலையை சுத்தம் செய்தனர்.
பெரியார் சிலை மீது சாணியை பூசி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.மேலும் சிலை மீது சாணியை பூசி சென்ற மர்ம நம்பர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.