குறுக்கே வந்த மாடு… பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மெக்கானிக் : 2 நாளில் வெளிநாடு செல்ல இருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 1:29 pm

நத்தத்தில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் பலி- சிசிடிவியில் பதிவான பத பதைக்கும் வீடியோ காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது42) இவர் நத்தம் இ.பி அலுவலகம் முன்பாக மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். அழகர்சாமிக்கு மனைவி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று இரவு நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அவரும் அவரது உறவினர் மாணிக்கம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராக்காச்சி புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது காந்திஜி கலையரங்கம் முன்பாக மாடு குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் ஏற்றப்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அழகர்சாமி இன்னும் சில தினங்களில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/733530057

மேலும் நத்தம் பகுதி சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்