‘ஏய், ஏத்துடா… ஏத்துடா’… மினி வேனில் வந்து மாட்டை திருடிச் சென்ற கும்பல் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan14 May 2024, 7:46 pm
ஜோலார்பேட்டை அருகே மினி வேனில் மர்ம நபர்கள் மாடு திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி. இவர் சொந்தமாக மாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பிக்கப் பேனில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த மாட்டை பிடித்துக் கொண்டு பிக்கப் வேனில் ஏற்றி மாட்டை திருடி சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: கமல் பார்ட்டியில் போதைப்பொருள்… நடிகர் தனுஷ் செய்த ஃபிராடு வேலை : பாடகி சுசித்ரா பகீர்..!!!
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தட்சிணாமூர்த்தி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.