சிறுமியை முட்டித்தூக்கி வீசிய மாடு… ஆக்ரோஷமாக தாக்கிய அதிர்ச்சி ; சென்னையில் ஷாக் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 11:24 am

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை திடீரென மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பசு மாடுகள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.

இதனால், அலறித் துடித்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. இதைக் கண்டு அலறிய சிறுமியின் தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் கற்களை வீசி மாடுகளை விரட்ட முயன்றனர். ஆனால், அதனையும் பொருட்படுத்தாத இரு மாடுகளும், கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் மாடு உள்ளிட்ட விலங்குகள் செல்லும் போது கவனமான செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

https://twitter.com/i/status/1689502354922754048
Courtesy : @rameshibn

இதனிடையே, தெருவில் அவிழ்த்து விடாமல் தனி இடத்தில் மாட்டு உரிமையாளர்கள் அடைத்து வைக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!