வேடசந்தூர் அருகே தீவன நீரை குடித்த 5 பசு மாடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தொட்டய கவுண்டனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி(43), விவசாயி. இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். பெரியசாமி விவசாயத்துடன் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை இவரது மனைவி வடிவுக்கரசி மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை தொட்டியில் குடிக்க வைத்துள்ளார்.
அதை குடித்த சிறிது நேரத்தில் 5 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து அசைவற்று கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வடிவக்கரசி இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
வடமதுரை கால்நடை உதவி மருத்துவர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சையளித்தார். ஆனால் அதற்குள் 5 பசு மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அதன்பின்னர் கால்நடை மருத்துவர் நடத்திய ஆரம்பகட்ட சோதனையில் பசுக்கள் குடித்த தீவன நீரில் யூரியா கலந்திருப்பது தெரியவந்தது.
எனினும் இறந்த மாடுகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே இறப்பிற்கான காரணம் குறித்து உறுதியாக தெரியவரும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
தீவனத்தில் தவறுதலாக யூரியா கலந்ததால் மாடுகள் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமாக என்று வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி வளர்த்த 5 பசு மாடுகள் தீவன நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.